search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னாசி பழம்"

    • அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் மட்டும் அன்னாசி விளைந்து வருகிறது.
    • சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அன்னாசி பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.

    சேந்தமங்கலம்:

    கொல்லிமலையில் அன்னாசி பழம் சீசன் தொடங்கியது. இந்நிலையில் விலை உயர்வுக்காக மலைவாழ் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலையில் 14 ஊராட்சி பகுதிகள் காணப்படுகிறது. அதில் குறிப்பாக அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் மட்டும் அன்னாசி விளைந்து வருகிறது. மற்ற பகுதிகளில் மற்ற பழங்கள் விளைந்து வருகிறது.

    மேற்குறிப்பிட்ட 2 ஊராட்சி பகுதிகளில் அன்னாசி பழத்திற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை நிலவுவதால் அங்கு நாட்டு ரகம் மற்றும் கியூரக அன்னாசி ஆகியவை விளைந்து வருகிறது. அதில் குறிப்பாக நாட்டு ரக அன்னாசி பழங்களே அதிக அளவில் விளைந்து வருகிறது.

    சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அன்னாசி பழம் சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு அன்னாசி பழம் சீசன் நடந்து வருகிறது.

    அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் அன்னாசி பழங்கள் வாகனங்கள் மூலமாக அங்குள்ள சோளக்காடு, தெம்பலம் ஆகிய சந்தை பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது.

    அந்த சந்தைகளில் இருந்து மூட்டை, மூட்டையாக லாரிகளில் ஏற்றப்பட்டு வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு ஒரு மூட்டை அதிகபட்ச விலையாக ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. ஆனால் இந்தாண்டு தற்போது தொடக்கத்தில் ரூ.250 முதல் ரூ.500 வரையில் விற்பனை ஆகி வருகிறது.

    வருகிற வாரங்களில் விலையேற்றம் வந்தால் தான் அன்னாசி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதனால் விலை உயா்வுக்காக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • தருமபுரியில் அன்னாசி பழம் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது.
    • எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசி பழமானது அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.

    தருமபுரி,

    தருமபுரியில் மார்க்கெட் ரோடு, பென்னாகரம் சாலை, கலெக்டர் அலுவலகம், உள்ளிட்ட பல பகுதிகளில் கொல்லிமலை அன்னாசி பழம் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் கொல்லிமலை, ஏற்காடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் அதிகபடியாக அன்னாசி பழம் சாகுபடி செயல்படுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யப்படுகிறது.

    அதே ஜூன், ஜூலையில் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு வருட பயிரான இவற்றில் பல நன்மைகள் உள்ளதாகவும், அதேபோல் அதிகளவு எடுத்துக் கொண்டால் தீமைகளையும் விளைவிக்கும் என மருத்துவர்களும் இயற்கை மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

    பிரேசில், பராகுவே ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதாகவும். அன்னாசியில் வைட்டமின் ஏ.பி.சி ஆகிய உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளதாகவும், பொட்டாசியம், கால்சியம், மினரல்ஸ் போன்ற முக்கியச் சத்துகளும், இதில் அடங்கி யுள்ளதாக தெரிவிக்கின்றனர். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசியில் புரதம் மற்றும் இரும்புச்சத்துகளும் உள்ளன.

    100 கிராம் அன்னாசிப்பழத்தில் 88 சதவிகிதம் ஈரப்பதமும், 0.5 சதவிகிதம் புரதமும், 10.8 சதவிகிதம் மாவுச்சத்தும் 17 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 63 மில்லி கிராம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் நிறைந்துள்ளது.

    இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அன்னாசிப் பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். சிலருக்கு நிற்காமல் தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒரு சங்கு (பாலாடை) அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தினால் குணமாகும். மலச்சிக்கல் தீர இதே கலவையை இரண்டு மடங்கு அதிகமாக அருந்தினால் பிரச்னை நீங்கும்.

    எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசி பழமானது அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும். சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடையைப் பெறலாம்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த அன்னாசி பழங்களை தற்போது தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
    • நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் வந்து அன்னாசியை வாங்கிச் செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் முன்பு ஊடுபயிராக வாழைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன.

    ஆனால் இப்போது ரப்பர் தோட்டத்தில் ஊடு பயிரின் இடத்தை அன்னாசி செடிகள் பிடித்து விட்டன. ரப்பர் மரத்தை 25 ஆண்டுகள் வளர்த்து விட்டு அதை வெட்டிவிட்டு புதிய ரப்பர் செடிகள் நடுவார்கள். அது ரப்பர் மரமாகி பால் வெட்டுவதற்கு சுமார 7 வருடங்கள் ஆகும்.

    இந்த இடைப்பட்ட காலங் களில் ரப்பர் தோட்டங்களில் ஊடு பயிராக அன்னாசியைப் பயிரிட குத்தகைக்கு வழங்கு வார்கள். இதில் இரண்டு வகையான லாபம் தோட் டத்துக்கு உரிமையாளருக்கு கிடைக்கிறது. குத்தகைப் பணம் மற்றும் ரப்பர் செடிகள் பராமரிப்பு இலவசமாகக் கிடைக்கும்.

    அன்னாசியை பொறுத்த வரை குறுகிய காலத்திலேயே பலன் தரும். ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். செடிக்கு செடி ஒன்றரை அடி, வரிசைக்கு ஒன்றரை அடி என்று இடைவெளி விட்டு நட வேண்டும். இப்படி பத்து அடி வரிசை நடவு செய்த பிறகு ரெண்டு அடி இடை வெளி விட்டு அடுத்த வரிசையை நட வேண்டும். ஒரு வருடத்தில் காய் நன்கு பழமாகும் தருவாய் வந்ததும் காய்களை பறித்து சந்தையில் விற்கலாம்.

    இப்போது கோடை காலம் என்பதால் மார்க் கெட்டில் அன்னாசி யின் தேவை அதிகமாக இருப்ப தால் பெரும்பாலும் வியா பாரிகள் தோட்டத்துக்கு வந்தே அன்னாசிப்பழங் களை வாங்கி செல்கிறார்கள். இரண்டு வருடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 டன் அன்னாசி பழம் கிடைக்கும். கடந்த ஆண்டு துவக்கத்தில் இருபது ரூபாய்க்கும் கீழ் அன்னாசியின் விலை இருந்தது. இப்போது கிலோ வுக்கு 53 ரூபாய் கிடைக்கிறது.

    இது குறித்து அருவிக்க ரையைச்சேர்ந்த அன்னாசி பழ விவசாயி ராதாகிருஷ் ணன் கூறியதாவது;-

    கடந்த பத்து ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டதில் அன்னாசிப்பழங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. பத்தாயிரம் ஏக்கர் நிலப்ப ரப்புக்கு மேல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசி சாகுபடி நடக்கிறது. இங்கி ருந்து சென்னை, விஜய வாடா, பெங்களூரு, மராட் டியம் உட்பட அனைத்து பகுதிகளிலும் அன்னாசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒரு அன்னாசி அரை கிலோவில் இருந்து இரண்டரை கிலோ வரை சராசரி எடை கொண்டதாக இருக்கும். தற்போது அன்னாசி பழம் கிலோவிற்கு 53 ரூபாய் மார்க்கெட் விலை உள்ளது. பச்சை காய் என்றால் 46 ரூபாய் விலை போகிறது.

    எங்களிடம் இருந்து அன்னாசியை வாங்கும் வியாபாரிகள் அன்னாசியை ஏ, பி, சி என அன்னாசியின் அளவை கணக்கிட்டு தரம் பிரிக்கிறார்கள். இதனால் கடைகளில் தற்போது கிலோவிற்கு 60 முதல் 80 ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து பொதுமக்கள் வாங்க வேண்டியிருக்கும். கொரோனா காலத்தில் ரப்பர் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

    இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் அதிகரித் துள்ளனர். இதனால் அவர்கள் அன்னாசிபழங்களை விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆகவே அன்னாசியின் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் தோட்டங்களுக்கு வந்து அன்னாசியை வாங்கிச் செல்கிறார்கள். நாளுக்கு நாள் குமரிமாவட்டத்தில் அன்னாசி சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.

    ×